இந்தியா

ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பிரணாப்: காங்கிரஸ் விளக்கம்

ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பிரணாப்: காங்கிரஸ் விளக்கம்

webteam

நாட்டின் உண்மை நிலை என்னவென்பதை ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு பிரணாப் முகர்ஜி பிரதிபலித்திருப்பதாக காங்கிரஸ் விளக்கமளித்துள்ளது.

ஆர்எஸ்எஸ் தலைமையிடம் அமைந்துள்ள நாக்பூரில் நேற்று நடைபெற்ற அந்த அமைப்பின் கூட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு பேசினார். காங்கிரஸ் மூத்த தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி பிரணாப், இதில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிகழ்வு தொடர்பாக காங்கிரஸ் தகவல் தொடர்புத்துறைப் பிரிவு பொறுப்பாளர்

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள் ளார். அதில், இந்தியாவின் பன்முகத்தன்மை, சகிப்புத்தன்மை, மதச்சார்பின்மை உள்ளிட்டவற்றை ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு பிரணாப் முகர்ஜி நினைவூட்டியிருப்பதாக சுர்ஜேவாலா குறிப்பிட்டுள்ளார். புத்திக்கூர்மையுடன் கூடிய பிரணாபின் அறிவுரையை ஏற்று, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தங்களது தவறுகளை ஒப்புக்கொண்டு பதிலளிக்க முன் வர வேண்டும் என்று சுர்ஜேவாலா வலியுறுத்தியுள்ளார். 

(ரந்தீப் சுர்ஜேவாலா)

பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்து நாடு என்றபோதிலும், மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என பிரணாப் பேசியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள சுர்ஜேவாலா, இதனை பிரதமர் நரேந்திர மோடி கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆகவே, தங்களது நோக்கத்தையும், சிந்தனைப் பாதையையும் மாற்றிக்கொள்ள பாரதிய ஜனதாவும், ஆர்எஸ்எஸ்சும் வெளிப்படையாக உறுதி பூண வேண்டும் என்றும் ரந்தீப் சுர்ஜேவாலா கேட்டுக்கொண்டுள்ளார். 

இதனிடையே, ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், நாக்பூர் கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டது பற்றி விவாதிக்க ஏதுமில்லை என்று கூறியுள்ளார். பல்வேறு துறைகளில் பிரபலமாக இருப்பவர்களை ஆர்எஸ்எஸ்சின் கூட்டத்திற்கு அழைப்பது வழக்கம்தான் என்றும் மோகன் பகவத் தெரிவித்தார்.