இந்தியா

"தமிழகத்தில் பரவும் லவ் ஜிகாத்"- தேசிய பட்டியலினத்தோர் நல ஆணைய துணைத்தலைவர் குற்றச்சாட்டு

"தமிழகத்தில் பரவும் லவ் ஜிகாத்"- தேசிய பட்டியலினத்தோர் நல ஆணைய துணைத்தலைவர் குற்றச்சாட்டு

webteam

திருச்சியில் பாஜக பிரமுகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த 27-ஆம் தேதி திருச்சி பாலக்கரை பாஜக மண்டலச் செயலாளர் விஜய் ரகு, கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான மிட்டாய் பாபு, ஹரிபிரசாத் ஆகியோர் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த முகமது யாசர், சுடர்வேந்தன், ஹக்கீம் ஆகியோரும் சிக்கியுள்ளனர். 26-ஆம் தேதி திட்டம் தீட்டி 27-ஆம் தேதி விஜய ரகுவை கொலை செய்தோம் என 5 பேரும் வாக்குமூலம் அளித்திருப்பதாக தெரிகிறது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக, தேசிய பட்டியலினத்தோர் நல ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் நிகழ்விடத்திலும் அவரது குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜயரகு கொலை குறித்து விசாரணை நடத்தி, விரைவில் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று கூறினார். மேலும், கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் லவ் ஜிஹாத் கலாசாரம் பரவியிருப்பதாக குற்றம் சாட்டினார்.