இந்தியா

வேளாண் அமைச்சரின் கடிதத்தை உழவர் பெருமக்கள் படிக்க வேண்டுகிறேன் - பிரதமர் தமிழில் ட்வீட்

வேளாண் அமைச்சரின் கடிதத்தை உழவர் பெருமக்கள் படிக்க வேண்டுகிறேன் - பிரதமர் தமிழில் ட்வீட்

Sinekadhara

புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் தமிழிலும் பதிவு செய்திருக்கிறார்.

மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் டிசம்பர் 17ஆம் தேதி, ’விவசாய சகோதர சகோதரிகளுக்கு வேளாண் துறை அமைச்சரின் கடிதம்’ என்று தலைப்பிட்ட ஒரு கடிதத்தை தமிழில் வெளியிட்டிருந்தார். அதில், ‘'பொய்த் தகவல்கள் - உண்மைத் தகவல்கள்' என்று ஒரு பட்டியலை வெளியிட்டிருந்ததுடன், விவசாயிகளுக்கு சில வாக்குறுதிகளையும் கொடுத்திருந்தார்.

நரேந்திர சிங் தோமர் விவசாயிகளுக்கு எழுதிய அந்த கடிதம் குறித்து பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்திருக்கிறார். அதில், ‘’வேளாண் துறை அமைச்சர் @nstomer தனது உணர்வுகளை வேளாண் சகோதர சகோதரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இயல்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உழவர் பெருமக்கள் அதைப் படிக்க வேண்டுகிறேன். இந்தத் தகவலை பெருமளவில் பகிர வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார்.