இந்தியா

தண்ணீரில் செல்லும் விமான சேவை... இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.!

தண்ணீரில் செல்லும் விமான சேவை... இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.!

JustinDurai

குஜராத்தில் 'சீ ப்ளேன்' எனப்படும் கடல் விமானம் சேவையை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

குஜராத் மாநிலம் சபர்மதி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஒற்றுமை சிலையை காண கடல் விமான (சீ பிளேன்) சேவை இன்று முதல் துவக்கப்படுகிறது.

விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு துவக்கி வைக்கவுள்ளார். சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான இன்று, நாட்டிலேயே முதன் முறையாக கடல் விமானம் இயக்கப்படுகிறது.

இந்த சேவையை ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் ஏற்றுக்கொண்டுள்ளது. ஒரு நபருக்கு சுமார் 4,800 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 19 பேர் வரை பயணம் செய்ய முடியும் என்ற போதிலும் , 12 பேர் வரையில் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

முதற்கட்டமாக கடல் விமானம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றில் இருந்து நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியா காலனியில் உள்ள ஒற்றுமை சிலைக்கு செல்லும்.