இந்தியா

கொரோனா எதிரொலி: நாட்டு மக்களிடையே இன்று உரையாற்றுகிறார் மோடி

கொரோனா எதிரொலி: நாட்டு மக்களிடையே இன்று உரையாற்றுகிறார் மோடி

webteam

கொரோனா பாதிப்பும் அதனை எதிர்கொள்வது குறித்தும் நாட்டு மக்களிடையே இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை‌ 151 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 25 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்
‌என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு உயிரிழப்பு
நேரிட்டுள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன

இதற்கிடையே ராணுவ வீரர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்
குழு நேற்று கூடியது. கொரோனா பாதிப்பது குறித்தும் அதனை எதிர்கொள்வதும் குறித்தும் ஆலோசிக்கப்பட்டாக தெரிகிறது.

இந்நிலையில் நாட்டு மக்களிடையே இன்று இரவு 8 மணிக்கு கொரோனா பாதிப்பு குறித்தும் அதனை எதிர்கொள்வது குறித்தும் பிரதமர் மோடி
பேசவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.