இந்தியா

ராஜஸ்தான் கூட்டத்தில் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி - பின்னணி என்ன?

ராஜஸ்தான் கூட்டத்தில் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி - பின்னணி என்ன?

Abinaya

ராஜஸ்தானில் நேற்று நடந்த பாஜக கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, மைக் இல்லாமல் பேசிய வீடியோ தற்போது ட்ரெண்டாகி உள்ளது.

ராஜஸ்தானில் சிரோஹியின் அபு ரோடு பகுதியில் நேற்று பாஜகவின் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின் முடிவில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேச ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் மோடி கூட்டத்தில் கலந்துகொள்ளும் போது இரவு 10 மணியாகிவிட்டது. இரவு 10 மணிக்கு மேல் பொதுக்கூட்டங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. எனவே அதை தான் பின்பற்றுவதாகக் கூறி, பிரதமர் மோடி மைக் இல்லாமல் கூட்டத்தில் பேசினார்.

இந்த கூட்டத்தில் பேசிய மோடி, ‘ இங்கு வந்து சேர தாமதமாகிவிட்டது. அதற்காக முதலில் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கி விதியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அதனால் மைக் இல்லாமல் சுருக்கமாகப் பேசிமுடித்துகொள்கிறேன். விரைவில் மீண்டும் இங்கு வந்து உங்களது அன்பையும் ஆதரவையும் பெறுகிறேன்’ என உறுதியளித்தார்.

மேலும் கூட்டத்தினர் பிரதமரின் வருகைக்காகக் காத்திருந்தது பிரதமர் பேச முடியாமல் போனதற்கு, அக்கூட்டத்திற்கு முன்பாக மோடி மன்னிப்பு கேட்டார். இந்த வீடியோவை பகிர்ந்து பல பிஜேபி தலைவர்கள் பிரதமரைப் பாராட்டி வருகின்றனர்.