இந்தியா

பிரதமராக 'மான் கி பாத்தில்' பேசுவது இதுவே கடைசி முறை - நரேந்திர மோடி

பிரதமராக 'மான் கி பாத்தில்' பேசுவது இதுவே கடைசி முறை - நரேந்திர மோடி

webteam

நான் பிரதமராக மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசுவது இதுவே கடைசி முறை என்றும், எதிர்காலத்திலும் தொடர்ந்து பேசுவேன் என்று நம்புவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை இந்திய மக்களிடையே மான் கீ பாத் என்னும் நிகழ்ச்சி மூலம் உரையாற்றி வருகிறார். அந்தந்த மாதங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்தும், முக்கிய திட்டங்கள் குறித்தும் பிரதமர் மோடி இந்த ரேடியோ நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பகிர்ந்து கொள்வார்.

இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவையே உலுக்கிய காஷ்மீர் தாக்குதலுக்கு பிறகான மான் கீ பாத் என்பதால் இன்றைய நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. அதன்படி மான் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய மோடி காஷ்மீர் தாக்குதல் குறித்து பேசினார். 

அதில் புல்வாமா தாக்குதலில் வீரர்களின் உயிர்த்தியாகத்தால் நாட்டுமக்கள் துயரமும் கோபமும் அடைந்துள்ளனர் என்றும், வேறுபாடுகளை மறந்து பயங்கரவாதத்திற்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை உறுதியாக வைக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர், நான் பிரதமராக மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசுவது இதுவே கடைசி முறை; தேர்தல் வர இருப்பதால் 3 மாதங்களுக்குப் பிறகுதான் மான் கி பாத்தில் பேச முடியும். வரும் மக்களவை தேர்தலில் வேட்பாளராக நானும் போட்டியிடுவேன். மான் கி பாத்தில் தொடர்ந்து பேசுவேன் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.