இந்தியா

சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் மோடியின் புகைப்படம்..!

சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் மோடியின் புகைப்படம்..!

Rasus

உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சுவிட்சர்லாந்து சென்றுள்ளார். அங்குள்ள டாவேஸ் நகரில் அவர் எடுத்துள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பலரால் பகிரப்பட்டு வருகிறது.

உலக பொருளாதார மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி 48-வது உலக பொருளாதார மாநாடு சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் 4 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று சுவிட்சர்லாந்து புறப்பட்டு சென்றார். கடந்த 20 ஆண்டுகளில் இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்பது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு கடந்த 1997-ம் ஆண்டு நடந்த உச்சி மாநாட்டில் அப்போதைய பிரதமர் எச்.டி.தேவ கவுடா பங்கேற்றார். அதன் பிறகு இந்திய பிரதமர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் சுவிட்சர்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள டாவோஸ் நகரில் உறைபனி மத்தியில் புகைப்படம் எடுத்துள்ளார். அந்தப் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் மோடி உறைபனி சூழ கையில் ஜெர்கினுடன் உள்ளார். கறுப்பு நிற குர்தா உடையணிந்துள்ள பிரதமர் மோடி அதற்கேற்ப வெள்ளை நிற பேண்ட் உடுத்தியுள்ளார். பிரதமர் மோடியின் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பலரால் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.