இந்தியா

குருவாயூர் கோயிலில் வழிபட்டார் பிரதமர் மோடி

குருவாயூர் கோயிலில் வழிபட்டார் பிரதமர் மோடி

webteam

கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை வழிபாடு செய்தார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 352 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 302 இடங்களில் கைப்பற்றியது. இதையடுத்து 2 வது முறையாக மோடி, கடந்த 30 ஆம் தேதி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் அவர் கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் இன்று வழிபாடு நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக அவர் கொச்சி வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை மாநில ஆளுநர் சதாசிவம், மத்திய அமைச்சர் முரளிதரன் மற்றும் பாஜக மூத்தத் தலைவர்கள் வரவேற்றனர். 

கொச்சியில் இருந்து திருச்சூரில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு சிறப்பு வழிபாடு நடத்தி னார். அவர் அங்கு துலாபாரம் கொடுத்தார். எடைக்கு எடை அவர் தாமரைப் பூக்களை துலாபாரம் கொடுத்தார்.

பிரதமர் மோடிக்காக, அங்கு சிறப்பு பூஜை களும் நடத்தப்பட்டன. பிரதமர் மோடியுடன் கேரள ஆளுநர் சதாசிவம் மற்றும் பாஜக நிர்வாகிகளும் வழிபட்டனர்.

முன்னதாக, பிரதமர் வருகையையொட்டி, குருவாயூர் கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.