இந்தியா

புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு டிச.10-ல் அடிக்கல்

புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு டிச.10-ல் அடிக்கல்

jagadeesh

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரதமர் மோடி வரும் 10ஆம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளார்.

இத்தகவலை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். டெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டடம் 93 ஆண்டுகள் பழமையானதாலும், தற்போதைய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை என்பதாலும் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்படுகிறது.

தற்போதைய கட்டடத்திற்கு அருகிலேயே முக்கோண வடிவில் 862 கோடி ரூபாயில் அமைய உள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டும் ஒப்பந்தத்தை டாட்டா நிறுவனம் பெற்றுள்ளது. அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடத்தில் எதிர்காலத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் அதற்கேற்ப கூடுதல் இருக்கைகளும் அமைக்கப்பட உள்ளது