இந்தியா

216 அடி உயரம்..5 வகை உலோகம் - இந்தியாவின் 2வது பிராமாண்ட சிலையை திறந்து வைத்தார் மோடி

216 அடி உயரம்..5 வகை உலோகம் - இந்தியாவின் 2வது பிராமாண்ட சிலையை திறந்து வைத்தார் மோடி

கலிலுல்லா

ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள சமத்துவத்திற்கான சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 216 அடி உயர ராமானுஜர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ‘சமத்துவத்திற்கான சிலை’ என பெயரிடப்பட்டுள்ள அந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். வைணவ மத ஆச்சார்யர்களில் ஒருவரான ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த ஆண்டை முன்னிட்டு, 216 அடி உயரமுள்ள அவரது பிரம்மாண்ட சிலை திறந்து வைக்கப்பட்டது.

தங்கம், வெள்ளி, தாமிரம், வெண்கலம், துத்தநாகம் ஆகிய 5 உலோகங்களை கலந்து சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 2ஆவது உயரமான சிலை என்ற பெருமையையும் இந்த சிலை பெற்றுள்ளது. உலகத்தில் உலோகத்தால் செய்யப்பட்ட மிக உயரமான சிலைகளில் ஒன்றாக ஹைதராபாத் ராமானுஜர் சிலை கருதப்படுகிறது.