இந்தியா

சீனத் துருப்புகள் இந்தியாவுக்குள் ஊடுருவி 7 வாரங்கள் ஆகிவிட்டன : ப.சிதம்பரம்

சீனத் துருப்புகள் இந்தியாவுக்குள் ஊடுருவி 7 வாரங்கள் ஆகிவிட்டன : ப.சிதம்பரம்

webteam

சீன துருப்புகள் ஊடுருவல் தொடர்பாக பிரதமர் இதுவரை வாய் திறந்து ஒருவார்த்தை சொல்லவில்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இந்திய - சீன எல்லை மோதல் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், “சீனத் துருப்புகள் இந்திய நிலப்பரப்பில் ஊடுருவி 7 வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால் இந்தியப் பிரதமர் இது வரை வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை. இது போன்று வாய் திறக்காத பிரதமரோ, ஜனாதிபதியோ உலகில் வேறு நாட்டில் யாராவது உள்ளார்களா?

இந்திய படை வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். எத்தனை வீரர்கள்? அவர்கள் பெயர்கள் என்ன? எந்த மாநிலங்களைச் சார்ந்தவர்கள்? எந்தத் தகவலையும் அரசு இதுவரை அதிகார பூர்வமாகத் தெரிவிக்கவில்லை, ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நேற்றிரவு இந்திய மற்றும் சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய ராணுவத்தின் கர்னல் மற்றும் இராணுவப் படைவீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்ததாக இன்று அறிவிப்பு வெளியாகியது. இதைத்தொடர்ந்து இந்திய ராணுவத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் முப்படைகளின் தளபதி உள்ளிட்டோர் அவசர ஆலோசனை நடத்தி, பிரதமரிடம் விளக்கமளித்தனர்.

இந்நிலையில் லடாக் எல்லையில் நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக இந்திய ராணுவம் உறுதி செய்துள்ளது. இதே அளவில் சீன தரப்பிலிருந்து உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.