கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஏசு கிறிஸ்து பிறந்தநாளான இன்று நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட கிறிஸ்தவர்கள் அமைதி நிலவ வழிபட்டனர். மேலும் இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இயேசு பிரானின் போதனைகளை நினைவில்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த நன்னாளில் மகிழ்ச்சி பெருகவும் சமூகத்தில் ஒற்றுமை நிலவவும் வாழ்த்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.