இந்தியா

கேரள பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு: யெச்சூரி மீதான தாக்குதல் எதிரொலி!

கேரள பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு: யெச்சூரி மீதான தாக்குதல் எதிரொலி!

webteam

டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீத்தாராம் யெச்சூரி மீதான தாக்குதல் முயற்சி நடைபெற்ற சில மணிநேரத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடைபெற்றது.

டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. செய்தியாளர்களை சந்திக்க வந்த சி.பி.எம். தலைவர் சீத்தாராம் யெச்சூரி வந்தபோது, இந்து இயக்கத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள், கோஷம் போட்டவாறு அவர் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்தனர். அந்த இளைஞர்களை அக்கட்சியினர் தடுத்து நிறுத்தினர். அதன்பிறகு காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.

இச்சம்பவத்தின் எதிரொலியாக, சி.பி.எம். ஆட்சி நடக்கும் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மாவட்ட பாஜக அலுவலகத்தில் பெட்ரொல் குண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் யாருக்கும் எந்த காயமோ, பெரிய பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. இந்தத் தாக்குதலைக் கண்டித்து பாஜக, இன்று மாவட்ட அளவிலான முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.