நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கன்னிகாதேவி காலணி கிராமத்தில் 2 குட்டிகளுடன் ஆக்ரோஷமாக உலாவரும் கரடியை அடர்ந்த வனப் பகுதிக்குள் அனுப்பு கிராம மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அண்மைக்காலமாக அதிகரித்து காணப்படுகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேவரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து விடுகின்றன. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக கோத்தகிரி அருகே கன்னிகா தேவி காலணி கிராமத்தில் இரண்டு குட்டிகளுடன் கரடி ஒன்று உலா வருகிறது.
இந்த கரடி குட்டிகளுடன் இருப்பதால் ஜாலியாக காணப்படுகிறது. அதேசமயம் அந்தக் கரடி கிராம மக்களை துரத்தியதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டுமென்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.