இந்தியா

“100% தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது” - ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனம்

“100% தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது” - ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனம்

Sinekadhara

கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் மருத்துவ ஆக்சிஜன் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யமுடியாத நிலை உள்ளதாக தனியார் மருத்துவ ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா 2 ஆவது அலை காரணமாக மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவை ஏழுமடங்கு அதிகரித்துள்ளது. ஆக்சிஜன் தேவையில் முக்கியபங்கு வகிக்கும் தனியார் ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனம், ஆக்சிஜன் தேவையில் 100 சதவிகிதத்தை தங்களால் பூர்த்தி செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு இடங்களில் உள்ள 800 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு திரவ மருத்துவ ஆக்சிஜனை நேரடியாகவும், மறைமுகமாகவும் வழங்கும் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் விநியோகம் செய்யும் ஒரு தனியார் நிறுவனம், கடந்த 3 வாரங்களாக தங்கள் உற்பத்தியை விட அதிகமாக விநியோகித்து வருவதாக தெரிவித்துள்ளது.

ஆனால், ஒவ்வொரு மருத்துவமனையிலும் தேவை அதிகரித்துள்ள நிலையில், அதனை 100 சதவிகிதம் பூர்த்திசெய்ய முடியாத நிலை உள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. மருத்துவ ஆக்சிஜன் தேவைக்கு சுகாதாரத்துறை மற்றும் முதன்மைச்செயலாளரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.