இந்தியா

‘5 ஆண்டில் 3,400 வங்கிக் கிளைகள் மூடல்’ - ஆர்டிஐ தகவல் 

‘5 ஆண்டில் 3,400 வங்கிக் கிளைகள் மூடல்’ - ஆர்டிஐ தகவல் 

webteam

கடந்த 5 ஆண்டுகளில் நாடெங்கும் 3,400 வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

26 பொதுத் துறை வங்கிகளின் 3,400 கிளைகள் மூடப்பட்டுள்ள நிலையில் இதில் 75% வங்கிகள் பாரத ஸ்டேட் வங்கியை சேர்ந்தவை என்றும் தெரியவந்துள்ளது. வங்கிகள் இணைப்பு நடவடிக்கை மூலமும் பல்வேறு கிளைகள் மூடப்பட்டதாக அரசின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் இணைப்பை மத்திய அரசு முழுவீச்சில் மேற்கொண்டுள்ள நிலையில் இதனால் வேலையிழப்புகள் ஏற்படும் என தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் மூடப்பட்ட வங்கிக் கிளைகள் புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது