கர்நாடகாவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இந்தியா டுடே குழுமம் நடத்திய கருத்துக் கணிப்பில், 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில், ஆட்சியமைக்கத் தேவையான 112 உறுப்பினர்கள் என்ற பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 90 முதல் 101 இடங்களும் பாரதிய ஜனதாவிற்கு 78 முதல் 86 இடங்கள் கிடைக்கும் என்றும் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சிக்கு 34 முதல் 43 இடங்கள் கிடைக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. முதலமைச்சர் சித்தராமய்யாவுக்கு 33 சதவிகித ஆதரவும், எடியூரப்பாவுக்கு 26 சதவிகிதமும், குமாரசாமிக்கு 21 சதவிகிதமும் ஆதரவு இருப்பதாகவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.