ஆசியாவிலேயே மிகவும் வயதான, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த தாட்சாயினி என்ற கோவில் யானை மரணம் அடைந்தது.
திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்கு சொந்தமான பெண் யானை ஒன்று, திருவனந்தபுரம் அருகே உள்ள சத்யம் நகர் பராமரிப்பு மையத்தில் வளர்க்கப்பட்டு வந்தது. தாட்சாயனி என பெயரிடப்பட்ட இந்த யானை பல்வேறு கோவில் விழாக்கள் மற்றும் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் ஆராட்டு விழாக்களில் பங்கேற்று வந்தது.
88 வயதான தாட்சாயனி யானை, ஆசியாவிலேயே வயதான யானை என்ற பெருமையை பெற்றிருந்தது. இதற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு ‘கஜா முத்தச்சி’ (பாட்டி யானை) என்ற பட்டம் பெற்ற தாட்சாயனி, கின்னஸிலும் இடம் பெற்றது. கடந்த சில மாதங்களாக, உடல் நலமில்லாமல் இருந்து வந்த தாட்சாயனி, செவ்வாய்க்கிழமை திடீரென மயங்கி விழுந்து மரணமடைந் தது. அதன் இறுதிச்சடங்குகள் நேற்று நடந்தன.
வயதான பெண் யானை ‘தாட்சாயனி’யின் மரணம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.