இந்தியா

'தேசிய ரயில்வே திட்டத்திற்கும் ரயில்வே தனியார் மயமாக்கலுக்கும் தொடர்பில்லை' - மத்திய அரசு

'தேசிய ரயில்வே திட்டத்திற்கும் ரயில்வே தனியார் மயமாக்கலுக்கும் தொடர்பில்லை' - மத்திய அரசு

PT WEB

தேசிய ரயில்வே திட்டத்திற்கும், ரயில்வே தனியார் மயமாக்கலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என ரயில்வே அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

ரயில்வே உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டை தனியார்மயமாக்களுக்கான தேசிய ரயில் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் உள்ளதா என மதுரை தொகுதி எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்துள்ள ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தேசிய ரயில்வே திட்டத்திற்கும் ரயில்வே தனியார் மயமாக்கலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என விளக்கம் கொடுத்துள்ளார்.

தேசிய ரயில்வே திட்டம் என்பது 2050ம் ஆண்டு வரை ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்தவும், ரயில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மட்டுமே செயல்படுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.