இந்தியா

மோடியிடம் மம்தாபோல் வேறு எந்த மாநில முதல்வர்களும் நடந்து கொள்வதில்லை - சுவேந்து அதிகாரி

மோடியிடம் மம்தாபோல் வேறு எந்த மாநில முதல்வர்களும் நடந்து கொள்வதில்லை - சுவேந்து அதிகாரி

sharpana

புயல் பாதிப்புகள் குறித்த பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தை மம்தா பானர்ஜி புறக்கணித்ததையடுத்து “பாரதிய ஜனதா கூட்டணியில் அல்லாத முதல்வர்கள் யாரும் பிரதமரிடம் மம்தாவை போல் நடந்துகொள்ளவில்லை” என்று மேற்கு வங்க பாஜக எதிர்கட்சித் தலைவர், சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.

யாஸ் புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிட இன்று பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு பயணம் செய்தார். அவ, மேற்கு வங்காளம் வந்து சேர்ந்தபோது மரபுப்படி பிரதமரை வரவேற்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமான நிலையத்திற்கு வரவில்லை. புயல் பாதிப்பு ஆலோசனைக் கூட்டத்திலும் மம்தா கலந்துகொள்ளவில்லை. ஆளுநர் மட்டுமே கலந்துகொண்டது சர்ச்சையாகியுள்ள நிலையில், நந்திகிராம் தொகுதியில் மம்தாவை தோற்கடித்த சுவேந்து அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில்,

     “இந்தியாவின் நீண்டகால கூட்டாட்சி தத்துவத்தின் இருண்ட நாள் இன்று. ஆனால், பிரதமரால் புனிதமானது. மேற்குவங்க மக்களின் துன்பங்களை பார்த்துக்கொண்டு மம்தா செயல்பாடுகளின்றி இருக்கிறார் என்பதை மீண்டும் காட்டியுள்ளார். அவரது, சர்வாதிகார தன்மை  அரசியலமைப்பு விழுமியங்களுக்கு மரியாதை இல்லாததை பிரதிபலிக்கிறது. மேற்கு வங்கத்தின் முன்னேற்த்திற்காக பிரதமருடன் இணைந்து பணியாற்றுவதற்குப் பதிலாக, அவர் தனியாக அரசியலில் ஈடுபடுகிறார்.

மம்தா பானர்ஜி, பிரதமரின் கூட்டத்தை தவிர்த்தது அருவறுப்பானது. இதற்கு முன்பெல்லாம்,  என்டிஏ கூட்டணியில் அல்லாத கட்சிகளைச் சேர்ந்த வெவ்வேறு மாநில முதல்வர்களுடன் வெள்ளம்,சூறாவளி, புயல் பாதிப்புகளை பிரதமர் மோடி பார்வையிட்டுள்ளார். ஆனால், அந்த முதல்வர்கள் யாரும் மம்தா நடந்துகொண்டதுபோல் நடந்து கொள்ளவிக்ல்லை. அரசியல் செய்ய ஒரு காலமும் ஆட்சி செய்ய ஒரு காலமும் இருக்கிறது. அதனை மம்தா புரிந்துகொள்ளவேண்டும். ஆம்பன் புயல் பாதிப்புகளையே மம்தா சரியாக நிர்வகிக்கவில்லை” என்று கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.