இந்தியா

கிரேட்டர் நொய்டாவில் தாக்கப்பட்ட ஆப்பிரிக்கர் - யோகிக்கு அழுத்தம் கொடுத்த சுஷ்மா

கிரேட்டர் நொய்டாவில் தாக்கப்பட்ட ஆப்பிரிக்கர் - யோகிக்கு அழுத்தம் கொடுத்த சுஷ்மா

Rasus

கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நைஜீரியாவை சார்ந்த நபர் உதைக்கப்பட்டு, இரும்பு குப்பை தொட்டிகளால் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கிரேட்டர் நொய்டாவில் உள்ள அன்சல் பிளாசாவில் எடுத்த இந்த வீடியோவை இந்தியா ஆப்பிரிக்க மாணவர்கள் சங்கம் பேஸ்புகில் பகிர்ந்தது. இனவாத தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், கருப்பு இனத்தை சார்ந்த ஒருவர் பொது இடத்தில் கடுமையாக தாக்கப்பட்ட போது அவரை காப்பாற்ற ஒருவரும் வரவில்லை என்பது கவலைக்குரிய விஷயம் என்று நெட்டிசன்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த வீடியோவை ட்விட்டரில் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்-க்கு ஒருவர் ட்விட் செய்தார். இதற்கு ட்விட்டரில் பதிலளித்த சுஷ்மா, உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாதிடம் இது குறித்து பேசியதாகவும் இந்த சம்பவம் பற்றி நியாயமான விசாரணை நடத்தப்படும் என யோகி தெரிவித்தாதகவும் கூறினார்.

அதே பகுதியில், இன்னும் இரண்டு நைஜீரியர்கள் சில கும்பலால் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறன. அதிகரிக்கும் இனவாத தாக்குதல்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுருத்தியுள்ளனர்.

இது தொடர்பாக கிரேட்டர் நொய்டா காவல் துறையினர் 1000 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 5 பேரை கைது செய்துள்ளனர்.