கோழிக்கோடு விமான விபத்தில் இறுதி நிமிடம் வரை விமானிக்கும் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்திற்கும் இடையே வழக்கமான உரையாடல்கள் நடைபெற்றதாகவும் ஆபத்து நெருங்குவது தொடர்பாக எந்த பதற்றமும் இல்லையென்றும் தகவல் வெளியாகியுள்ளது.
விமானம் தரையிறங்குவதற்கு முன் அது பறக்கும் உயரம், காற்றின் வேகம் உள்ளிட்டவை தரைக் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து தெரிவிக்கப்பட்டதாகவும் அதற்கு விமானியின் அறையிலிருந்து பதி்ல் வந்ததாகவும் அப்போது குரலில் எவ்வித பதற்றமோ அச்சமோ இருக்கவில்லை என்றும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவி்த்தார்.
விமான விபத்து குறித்த விசாரணையில் இது மிக முக்கிய தகவலாக பார்க்கப்படுகிறது. 191 பேர் இருந்த விமானம் மூன்று துண்டாக உடைந்திருந்த நிலையில் 18 பேர் மட்டுமே இறந்தது மிகவும் ஆச்சரியமானது என்று விபத்து குறித்து ஆய்வு செய்யும் அதிகாரி கேப்டன் அரபிந்தோ ஹண்டா தெரிவித்தார்.
உள்ளூர் மக்களும் தீயணைப்பு படை வீரர்களும் உடனடியாக மீட்பு பணிகளை தொடங்கியதே இறப்புகள் எண்ணிக்கை குறைய காரணம் என்றும் அவர் தெரிவித்தார்,