இந்தியா

நீட் வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்ற அமர்வில் ஒரு நீதிபதி மாற்றம்

நீட் வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்ற அமர்வில் ஒரு நீதிபதி மாற்றம்

webteam

நீட் தேர்வு தொடர்பான வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்ற அமர்வில் ஒரு நீதிபதி மாற்றப்பட்டுள்ளார்.

நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிப்பதை எதிர்க்கும் மனு மற்றும் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில், ஏற்கனவே விசாரணை நடத்திய அமர்வில் இருந்த ஒரு நீதிபதி மாற்றப்பட்டுள்ளார். ஏற்கனவே நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்தவா ராய், கான்வில்கர் ஆகியோர் விசாரித்த நிலையில், தற்போது கான்வில்கருக்கு பதிலாக நீதிபதி குரியன் ஜோசப் இடம்பெறுவார் என உச்சநீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.