மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தேசிய மனித உரிமை ஆணையம் மணிப்பூர் தலைமை செயலாளர் மற்றும் காவல்துறை தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட பெண்களின் உடல்நிலை தொடர்பான அறிக்கை, பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணம் உள்ளிட்டவை தொடர்பான விரிவான அறிக்கையை 4 வாரங்களில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கும் மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்கிற்கும் டெல்லி மகளிர் ஆணையர் ஸ்வாதி மாலிவால் கடிதம் எழுதியுள்ளார்.