இந்தியா

அதிக காலம் ஆட்சி புரிந்த பிரதமர்களில் முன்னேறும் மோடி !

அதிக காலம் ஆட்சி புரிந்த பிரதமர்களில் முன்னேறும் மோடி !

webteam

இந்திய பிரதமர்களில் அதிக காலம் ஆட்சி செய்த பிரதமர்கள் பட்டியலில் நரேந்திர மோடி 4வது இடத்திற்கு முன்னேறி வருகிறார்.

இந்திய நாட்டை அதிக காலம் ஆண்ட பிரதமர் என்ற பெருமை ஜவகர்லால் நேருவுக்கு உண்டு. நாட்டின் முதல் பிரதமர் என்ற பெருமையை‌ப் பெற்ற நேரு, தொடர்ச்சியாக 16 ‌ஆண்டுகள் மற்றும் 2‌86 நாட்கள் ஆட்சி புரிந்துள்ளார். நேருவுக்கு அடுத்தபடியாக அவரது மகள் இந்திரா காந்தி 15 ஆண்டுகள் 350 நாட்கள் ஆட்சி செய்துள்ளார். இதனையடுத்து குறைந்த காலம் ஆட்சி‌ புரிந்த பிரதமர் என்ற பெயரை சரண் சிங் பெறுகிறார். அவர் ‌170 நாட்‌கள் மட்டுமே ஆட்சி புரிந்த இவருக்கு நாடாளுமன்றத்தை சந்திக்காத ஒரே பிரதமர் என்ற பெயரும் உண்டு. 

1977ம் ஆண்டு ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அப்போது பிரதமராக ‌பதவியேற்ற மொரார்ஜி தேசாய் காங்கிரஸ் கட்சியை சாராத முதல் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார். நாட்டிற்கு அதிக பிரதமர்களைத் தந்த மாநிலம் என்ற பெருமையை உத்தரப்பிரதேசம் பெறுகிறது.‌ இதுவரை 14 பிரதமர்கள் நாட்டை ஆண்டுள்ள நிலையில் அதில் உத்தரப்பிரதேசத்திலிருந்து மட்டும் 8 பேர் பிரதமர் ஆகியுள்ளனர். குஜராத்திலிருந்து 3-வதாக தேர்தேடுக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி ஆவார். இவருக்கு முன்னாள் குல்சாரி‌லால் நந்தாவும் மொரார்ஜி தேசாயும் குஜராத் மாநிலத்திலிருந்து பிரதமர்களாக தேர்தேடுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக காலம் ஆட்சி புரிந்த பிரதமர்கள் பட்டியலில் ஜவகர்லால் நேரு, இ‌ந்திரா‌காந்தி, மன்மோகன்சிங், வாஜ்பாய், ராஜீவ்காந்தி ஆகியோர் முதல் 6 இடங்களில் உள்ளனர். இந்நிலையி‌ல் குஜராத் மாநிலத்திலிருந்து தேர்தேடுக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி 7வது இடத்தில் உள்ளா‌ர். மோடி தனது 2வது ஆ‌ட்சிக் காலத்தையும் பூர்த்தி செய்யும் பட்சத்தில், அதிக காலம் ஆண்ட பிரதம‌ர்கள் பட்டியலில் 4 அல்லது 5வது இடத்திற்கு முன்னேறுவார்.