நெட்டிசன்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த காவல்துறை பெரும்பாலும் ஆக்கப்பூர்வமான மற்றும் நகைச்சுவையான வீடியோக்கள் மற்றும் ட்வீட்களை பகிர்ந்து வருகின்றன. அந்த வகையில் மோசடிக்காரர்கள் பதிவிட்ட ட்வீட்டிற்கு, நாக்பூர் காவல்துறை கேலிசெய்து பதில் கொடுத்ததைப் பார்த்து நெட்டிசன்கள் சிரித்து பதில் கொடுத்துள்ளனர்.
மோசடி செய்பவர்களால் மக்களுக்கு அனுப்பப்பட்ட செய்திகளின் பல ஸ்க்ரீன் ஷாட்களில், இருக்கும் எழுத்துப்பிழை மற்றும் இலக்கணப்பிழைகளை சுட்டிக்காட்டி போலீஸார் ட்வீட் செய்துள்ளனர். அதில் அவர்களுக்கு சில இலக்கணத்தைக் கற்றுக்கொடுப்பதாக நாக்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களுக்கு வீட்டுப்பாடம் எடுப்பதாகவும், அதற்கு ஒரு ஹெல்ப் லைன் எண்ணையும் கொடுத்துள்ளனர். மேலும் ஜெயிலில் இலவசமாகத் தங்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.