வட மாநிலங்களில் வானில் தென்பட்ட ஒளிபோன்ற பொருளால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
ஜம்முவில் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையை ஒட்டிய ரஜோரி, பூஞ்ச், சம்பா, அக்னூர் மாவட்டங்களில் நேற்று மாலை வானில் மர்மமான முறையில் எரிந்த ஒளிபோன்ற பொருளை கண்டு மக்கள் அச்சத்திற்கு ஆளானார்கள். ஐந்து நிமிடம் வரை நீடித்த அந்த காட்சியை பலர் தங்களது செல்போன்களில் பதிவு செய்தனர். அது என்னவென்று தெரியாததால் சிலர் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதேபோன்று பஞ்சாப் மாநிலம் பதான்கோட் உள்பட பல இடங்களில் மர்மமான ஒளிபோன்ற பொருள் காணப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியது. எனினும், அது ஒரு செயற்கைக்கோள் என்பதை பாதுகாப்புத்துறை உறுதிப்படுத்தியது. என்றாலும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலோன் மஸ்க்-கின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்தி: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் கணிசமாக குறைந்திருக்கிறது: மத்திய அரசு தகவல்