இந்தியா

“மகன் இறந்துவிட்டான், 2 பேரன்களை அனுப்புவேன்” - வீரமரணம் அடைந்தவரின் தந்தை

“மகன் இறந்துவிட்டான், 2 பேரன்களை அனுப்புவேன்” - வீரமரணம் அடைந்தவரின் தந்தை

webteam

லடாக் எல்லையில் வீரமரணமடைந்த வீரரின் தந்தை பேசிய பேச்சு அனைவரையும் உணர்ச்சிவசப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நேற்று முன்தினரம் இரவு இந்திய - சீன படையினருக்கு இடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணடைந்தனர். அவர்களின் பெயர் பட்டியலை  இந்திய ராணுவம் வெளியிட்டது. இறந்த வீரர்களுக்கு அரசு, அரசியல்கட்சிகள், பிரபலங்கள் உட்பட அனைத்து தரப்பிலிருந்தும் இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வீரமரணமடைந்த பீகாரைச் சேர்ந்த வீரரான குந்தன் குமார் என்பவரின் தந்தை அளித்துள்ள பேட்டி உணர்ச்சிவசப்பட வைக்கும் வகையில் அமைந்துள்ளது. அவர் கூறும்போது, “எனது மகன் நாட்டிற்கு தனது வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டான். எனக்கு இரண்டு பேரக்குழந்தைகள் உள்ளனர். அவர்களையும் நான் ராணுவத்திற்கு அனுப்புவேன்” என தெரிவித்தார்.