இந்தியா

‘ராமர் கோயில் கட்டுவதற்கு இஸ்லாமியர்கள் உதவ வேண்டும்’ - முகலாய பரம்பரையை சேர்ந்த யாகூப்  

‘ராமர் கோயில் கட்டுவதற்கு இஸ்லாமியர்கள் உதவ வேண்டும்’ - முகலாய பரம்பரையை சேர்ந்த யாகூப்  

webteam

ராமர் கோயில் கட்டும் பணியில் இந்துக்களுக்கு இஸ்லாமியர்கள் உதவ வேண்டும் என முகலாய பரம்பரையை சேர்ந்தவர் கூறியுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது. மேலும் இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. 

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை வரவேற்பதாக சன்னி வக்ஃபு வாரியம் அறிவித்தது. தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்யும் எண்ணம் இல்லை என்றும் வாரியத் தலைவர் ஜஃபார் அஹமது ஃபரூக்கி கூறியிருந்தார். 

இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியில் இந்துக்களுக்கு இஸ்லாமியர்கள் உதவ வேண்டும் என முகலாய அரச பரம்பரையை சேர்ந்த இளவரசர் யாகூப் ஹபிபுதீன் டுக்கி கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் சகோதரத்துவத்திறகு உதாரணமாக இஸ்லாமியர்கள் திகழ முடியும் என்றும் அவர் தெரிவித்தார். 

அயோத்தியில் கோயில் கட்டுவதற்காக தங்கத்தால் ஆன ஒரு செங்கல்லை பிரதமர் மோடியிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் டுக்கி தெரிவித்தார். முகலாய அரச வம்சத்தில் கடைசியாக ஆண்ட பகதூர் ஷா ஜாஃபரின் வாரிசு என யாகூப் ஹபிபுதீன் தன்னை அறிவித்துக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது