இந்தியா

முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது

முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது

rajakannan

மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

மக்களவையில் முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்தார். மசோதா மீது இன்று முழுவதும் விவாதம் நடைபெற்றது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், முத்தலாக் தடை மசோதா மீதான வாக்கெடுப்பு மாநிலங்களவையில் மாலை 6 மணியளவில் நடைபெற்றது. முதலில் முத்தலாக் மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு அனுப்புவது தொடர்பான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், தேர்வுக்கு குழுவுக்கு அப்ப 84 பேர் ஆதரவு தெரிவித்தனர். அதேபோல், 100 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். டி.ஆர்.எஸ்., பிஎஸ்பி., தெலுங்கு தேசம் எம்பிக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

பின்னர் நடைபெற்ற முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவாக 99 பேரும், எதிர்ப்பு தெரிவித்து 84 பேரும் வாக்களித்தனர். இதன் மூலம், முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. 

மாநிலங்களவையில் போதிய பலம் இல்லாததால் பாஜக அரசால் பல மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் இருந்து வந்தது. இந்நிலையில், மாநிலங்களவையில் பாஜக கூட்டணியின் பலம் கூடியுள்ளதை இந்த மசோதா நிறைவேற்றம் காட்டுகிறது.