MP Tirunavukarasar pt desk
இந்தியா

“ராகுல் காந்தி பிரதமராவதற்கான முதல்படிதான், கர்நாடக தேர்தல் முடிவு!” - திருநாவுக்கரசர் எம்.பி.

அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ராகுல்காந்தி பிரதமர் ஆவதற்கான முதல்படி கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவு என திருப்பதி மலையில் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் பேட்டியளித்தார்.

webteam

பாராளுமன்ற ஆய்வுக் குழு உறுப்பினர்களான காங்கிரஸ் எம்பிக்கள் திருநாவுக்கரசர், மாணிக் தாகூர் ஆகியோர் இன்று காலை திருப்பதி மலையில் ஏழுமலையானை வழிபட்டனர். சாமி கும்பிட்ட பின் அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து தேவஸ்தான வேத பண்டிதர்கள் அவர்களுக்கு வேத ஆசி வழங்கினர்.

Shivakumar & Siddaramaiah

இதைத் தொடர்ந்து கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர் எம்.பி, “மத்தியில் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்ட பின் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். கர்நாடக தேர்தல் முடிவுகள், அடுத்து நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ராகுல் காந்தி நாட்டின் பிரதமர் ஆவதற்கான முதல்படி” என்றார்.

தொடர்ந்து அவரிடம், ‘கர்நாடக தேர்தலில் 40-க்கும் மேற்பட்டோர் பாஜக அதிருப்தி வேட்பாளர்களாக போட்டியிட்டதன் காரணமாகவே பாஜக தோல்வியடைந்து விட்டது’ என்று அண்ணாமலை கூறியது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “காங்கிரஸ் சார்பில்கூட 60-க்கும் மேற்பட்ட அதிருப்தி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அண்ணாமலை கூறுவதையெல்லாம் ஒரு காரணமாக ஏற்றுக்கொள்ள இயலாது. கர்நாடகாவில் பாஜக நடத்தியது திறமையற்ற மற்றும் ஊழல் நிறைந்த ஆட்சி. எனவே பொதுமக்கள் காங்கிரஸூக்கு வாக்களித்துள்ளனர்” என்றார்.