இந்தியா

வாடிக்கையாளர்களுக்கு இலவச உணவு - பெட்ரோல் பங்க் உரிமையாளரின் நல்ல உள்ளம் 

வாடிக்கையாளர்களுக்கு இலவச உணவு - பெட்ரோல் பங்க் உரிமையாளரின் நல்ல உள்ளம் 

webteam

குஜராத்திலுள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் சான்றிதழ் வாங்க நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் பங்க் உரிமையாளரே இலவசமாக உணவு வழங்கி வருவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதிய மோட்டார் வாகன சட்டத்துக்குப் பின் போக்குவரத்துத்துறையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கான உரிய ஆவணங்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பதால் பலர் பெட்ரோல் நிலையங்களில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் உள்ளிட்டவை பெற அலைமோதுகின்றனர். இதைப்போல் வதோதராவில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் சான்றிதழ் பெற பலர் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. சான்றிதழ் பெறுவதற்குள் உணவு வேளை வந்துவிடுவதால் வாடிக்கையாளர்கள் பசியாற இலவசமாக உணவுவை வழங்கும் சேவையை அந்த பெட்ரோல் நிலைய உரிமையாளர் செய்துவருகிறார். 

இது குறித்து தெரிவித்துள்ள பெட்ரோல் நிலைய உரிமையாளர் அரவிந்த் படேல், வாடிக்கையாளர்கள் காலை 6 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். வெயிலில் கூட உணவு உட்கொள்ளாமல் நிற்கின்றனர். இதுவரை நாங்கள் 13ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு உணவு வழங்கி இருக்கிறோம். இது தொழிலுக்காக அல்ல, உணவு வழங்குவது ஒரு சேவை. அதேவேளையில் சாலை விதிகளை கடைபிடிக்கக் கோரியும் வாடிக்கையாளர்களுக்கு வேண்டுகோளும் விடுக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் நிலைய உரிமையாளரின் சேவையை பொதுமக்களும் வாடிக்கையாளர்களும் பாராட்டி வருகின்றனர்.