ஜூலை 19ம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூடவிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி இந்த மழைக்கால கூட்டத்தொடர் நடத்தப்படும் என தகவல் வந்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரில், தடுப்பூசி விவகாரம் – பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பு வாய்ப்புள்ளது.
கொரோனா 2 வது அலைக்கு பிறகு நடைபெறும் கூட்டமென்பதால், அடுத்த அலையை தடுப்பது பற்றி விவாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
வழக்கமாக மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை மூன்றாவது வாரத்தில் தொடங்கி ஆகஸ்ட் 15 ஆம் தேதி வாக்கில் முடிவடையும். இந்த கூட்டத் தொடர் ஆகஸ்ட் 13 ஆம் தேதி முடிவடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மழைக்கால கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தியுள்ளார்.