இந்தியா

இலங்கை வெளியுறவு அமைச்சர் மோடியுடன் சந்திப்பு: தீருமா மீனவர்கள் பிரச்சனை?

இலங்கை வெளியுறவு அமைச்சர் மோடியுடன் சந்திப்பு: தீருமா மீனவர்கள் பிரச்சனை?

webteam

இலங்கையின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள திலக் மாரப்பனா பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

கடந்த 15 ஆம் தேதி இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்ற திலக், 3 நாட்கள் பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய அவர், பொருளாதார முதலீடுகள் மற்றும் இருநாடுகள் இடையேயான உறவை மேம்படுத்து குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது புதிதாக பதவியேற்றுள்ள திலக்கிற்கு, மோடி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

பின்னர் இந்திய வெளியுறுவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்தித்த அவர், எல்லை பிரச்னைகள் மற்றும் இருதரப்பு உறவு மேம்பாடு குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்புகளின் எதிரொலியாக இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படுமா, மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நிறுத்தப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.