இந்தியா

முத்தலாக் மசோதா : மீண்டும் அவசரச்சட்டம்

முத்தலாக் மசோதா : மீண்டும் அவசரச்சட்டம்

webteam

மும்முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்து முத்தலாக் மசோதாவை மத்திய அரசு மீண்டும் அவசரச் சட்டம் கொண்டுள்ளது. 

இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பு மசோதா எனப்படும் மும்முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முத்தலாக் முறை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் மசோதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. ஆனால் இந்த மசோதாவை நிலைக்குழுவிற்கு அனுப்பி மறுபரிசீலனை செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால் மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறவில்லை.

இதனால் முத்தலாக் தடை மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முத்தலாக் தடை மசோதாவை அவசரச் சட்டமாக கொண்டுவருவதற்கு ஒப்புதல் அளித்தது. இதனை தொடர்ந்து முத்தலாக் தடைச் சட்டம் அவசரச் சட்டமாக இயற்றப்பட்டது.

இந்நிலையில் இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பு மசோதா எனப்படும் முத்தலாக் தடை அவசரச் சட்டம் காலாவதியானது. இதனால் மத்திய அரசு முத்தலாக் தடை மசோதாவை மீண்டும் சட்டமாக கொண்டுவருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.கடந்த ஓராண்டுக்குள்,முத்தலாக் தடை மசோதா மூன்றாவது முறையாக அவசரச்சட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.