ஓடிபி முறையில் ஆதார் எண் இணைப்பு திட்டத்தை தொடங்க 4 முதல் 6 வாரம் வரை கூடுதல் அவகாசத்தை வழங்குமாறு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கேட்டுள்ளன.
ஓடிபி எனப்படும் செல்ஃபோனில் ஒரு முறை பாஸ்வேர்டு அனுப்பி இரு எண்களையும் இணைக்கும் நடைமுறையை தொடங்க நிறைய முன்னேற்பாடுகள் தேவைப்படுவதாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அடையாள எண் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளன. எனவே திட்டமிட்டடி டிசம்பர் 1ம் தேதி முதல் இணைப்பு பணியை தொடங்க இயலாது என அவை தெரிவித்துள்ளன.
ஓடிபி முறை தவிர மொபைல் ஆப் வழியாகவும் ஐவிஆர்எஸ் எனப்படும் பதிவு செய்யப்பட்ட குரல் வழி சேவை மூலமும் சிம் எண் இணைப்பை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. மொபைல் ஃபோன் - ஆதார் எண் இணைப்பை நிறைவு செய்ய வரும் பிப்ரவரி 3ம் தேதி வரை ஆதார் ஆணையம் கால அவகாசம் வழங்கியுள்ளது. இந்நிலையில் இணைப்பு திட்டத்தை தொடங்க மேலும் அவகாசம் கேட்டுள்ளன தொலைத்தொடர்பு நிறுவனங்கள்.