இந்தியா

மாநிலங்களவை தேர்தலில் நோட்டா அறிமுகம்

மாநிலங்களவை தேர்தலில் நோட்டா அறிமுகம்

webteam

மாநிலங்களவைத் தேர்தலில் முதல்முறையாக, யாருக்கும் வாக்களிக்கவில்லை என்பதற்கான நோட்டா அறிமுகமாகிறது.

குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததை அடுத்து, அக்கட்சியை‌ச் சேர்ந்த 44 எம்எல்ஏக்கள் பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தலா 15 கோடி ரூபாய் கொடுத்து வாங்குவதற்கான குதிரை பேரத்தில் பாஜக ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில் மத்திய தேர்தல் ஆணையம் 2013 ஆம் ஆண்டில் கொடுத்துள்ள வழிகாட்டுதல்களின்படி மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாய்ப்பு வாக்குச் சீட்டுகளில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் எம்எல்ஏக்கள் நோட்டாவை தேர்வு செய்யும் வாய்ப்பு வாக்குச்சீட்டில் இடம்பெறும் என்று அந்த மாநில சட்டப்பேரவைச் செயலாளர் படேல் அறிவித்துள்ளார். குஜராத்தில் வருகிற 8 ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அகமது படேல் போட்டியிடுகிறார். அவரது பெயர் அறிவிக்கப்பட்டதும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.