இந்தியா

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு

webteam

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், “பெண்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய சட்டப்பிரிவுகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் மீது வழக்குப்பதிவு செய்து தடயங்களை சேகரிக்க வேண்டும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவோரின் தகவல்களை பாதுகாத்து வைக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பதில் பாதிப்பு ஏற்படக்கூடாது. தவறுகள் நடப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்குகளை சரியான நேரத்தில் முடித்து குற்றவாளிகளுக்கு உரிய நேரத்தில் தண்டனை பெற்றுத்தர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது