இஞ்சினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒரு லட்சத்து 80 ஆயிரம் கார்களை திரும்பப் பெற மாருதி சுசூகி நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
2018ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி முதல் 2020ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி வரை விற்கப்பட்ட கார்களின் மோட்டார் ஜெனரேட்டரில் கோளாறு கண்டறியப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, சியாஸ், எர்டிகா, விட்டாரா ப்ரெஸா, எஸ்-கிராஸ், XL-6 ஆகிய கார்களை திரும்பப் பெற்று பழுதுள்ள பாகம் புதிதாக மாற்றித்தரப்படும் என மாருதி தெரிவித்துள்ளது.
புதிய பாகம் மாற்றப்படும்வரை தண்ணீர் தேங்கிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் மின்சார மற்றும் மின்னணு பாகங்கள் மீது தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ளமாறும் மாருதி சுசூகி அறிவுறுத்தியுள்ளது.