இந்தியா

டீச்சரை பின் தொடர்ந்த 62 வயது முதியவருக்கு சிறை!

டீச்சரை பின் தொடர்ந்த 62 வயது முதியவருக்கு சிறை!

webteam

55 வயது டீச்சரை, 2 வருடமாக பின் தொடர்ந்த 62 வயது முதியவருக்கு சிறை தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

தெற்கு மும்பை அருகேயுள்ள சேவ்ரி பகுதியை சேர்ந்தார் இஸ்டேகர் அன்சாரி. வயது 62. தொழிலதிபரான இவர் அதே பகுதியில் வசிக்கும் 55 வயது டீச்சரை காதலோடு பின் தொடர்ந்து சென்றுள்ளார். டீச்சர், ஹார்பர் லைன் ரயில் இருந்து காலை 7.30 மணிக்கு இறங்குவார். அங்கிருந்து அருகிலுள்ள பள்ளிக்குச் செல்வார். அப்போது யாரோ ஒருவர் தன்னை பின் தொடர்வதை உணர்ந்தார் டீச்சர். ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் இருந்த டீச்சர், பிறகு அந்த ஆள் தன்னைத்தான் பின் தொடர்கிறார் என்பது தெரிந்தது. 

கொஞ்ச நாள் விட்டுப் பிடித்த டீச்சர், ஒரு நாள், ’ஏன் என்னை பாலோ பண்றீங்க? இந்த வயசுல இது தேவையா?’ என்று கேட்டிருக்கிறார். ஆனால் டீச்சரையே முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்த அன்சாரி, எதுவும் பேசவில்லை. பிறகும் தொடர்வதை நிறுத்தவில்லை அவர். பலமுறை சொல்லியும் அவர் தொடர்வதை நிறுத்தாததால் டீச்சருக்கு பயம் வந்துவிட்டது. 

இதையடுத்து உறவினர்கள் ஆலோசனைபடி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இரண்டு வருடமாக தன்னை பின் தொடரும் அன்சாரிக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று கேட்டார் டீச்சர். விசாரித்த நீதிமன்றம், பின் தொடர்வது குற்றம் என்று கூறி அன்சாரிக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் 3 மாத சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.