இந்தியா

மம்தா பானர்ஜி ஒரு சூர்ப்பனகை: பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

மம்தா பானர்ஜி ஒரு சூர்ப்பனகை: பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

Rasus

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சூர்ப்பனகை என்று பாஜக எம்எல்ஏ ஒருவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொறுப்பற்ற முறையில், அர்த்தமற்ற கருத்துகள் தெரிவிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியினரை பிரதமர் மோடி தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகிறார். இந்நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சூர்ப்பனகை என்று பாஜக எம்எல்ஏ ஒருவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநில எம்எல்ஏவான சுரேந்திர சிங்தான் இந்தச் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜியை சூர்ப்பனகை என கூறியதற்கு விளக்கம் அளித்துள்ள சுரேந்திர சிங், மேற்குவங்கத் தெருக்களில் தொடர்ச்சியாக பொதுமக்கள் கொல்லப்படுவதாகவும், ஆனால் மாநில முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகக் கூறினார். மேற்குவங்கத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதாகவும் குறிப்பிட்டார். இதேநிலை தொடர்ந்தால் மேற்குவங்கம் அடுத்த ஜம்மு காஷ்மீர் போன்று மாறிவிடும் எனவும் கூறினார். மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்ற பின்பு, பயங்கரவாதிகள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாகவும் தெரிவித்தார்.

சூர்ப்பனகை என்பவள் இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு கதாபாத்திரம். அரக்கர் குலத்தைச் சேர்ந்த இலங்கை அரசன் இராவணனின் தங்கை ஆவாள்.