மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட மாணவர்களை கண்டித்த ஆசிரியருக்கு சரமாரியாக அடி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரயாக்ராஜ் பால்கரன்பூரின் ஆதர்ஷ் ஜந்தா இன்டர் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், அங்கு படிக்கும் மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் கல்லூரி ஆசிரியர் ஒருவர் மாணவர்களை திட்டியதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து ஆத்திரமடைந்த மாணவர்களும் அவர்களின் பாதுகாவலர்களும் ஆசிரியரை சரமாரியாக கட்டையால் தாக்கியுள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. கூட்டத்தில் இருந்த ஒருவர் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து பிரயாக்ராஜ் எஸ்.பி. கூறுகையில், “தாக்குதல் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவர்” எனத் தெரிவித்தார்.