பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில், வரலாற்று வெற்றியை வயநாட்டில் பதிவுசெய்துள்ளார் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி. இதையடுத்து, தனக்கு வாக்களித்தவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பான பதிவில்,
“வயநாட்டின் என் அன்புச் சகோதரிகள் மற்றும் சகோதரர்களே, நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றியில் மூழ்கிவிட்டேன். உங்கள் நம்பிக்கைகளையும் கனவுகளையும் புரிந்துகொண்டு உங்களுக்காக போராடுவேன். நாடாளுமன்றத்தில் உங்கள் குரலாக ஒலிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்!” என்றுள்ளார்.
மகாராஷ்ட்ரா (288 தொகுதிகள்):
பாஜக கூட்டணி - 230
காங்கிரஸ் கூட்டணி - 52
பிற - 6
ஜார்க்கண்ட் (81 தொகுதிகள்):
பாஜக கூட்டணி - 23
ஜெ.எம்.எம் கூட்டணி - 57
பிற - 1
இடங்களில் முன்னிலையில் இருக்கின்றனர்.
வயநாடு:
காங்கிரஸ் - 6,22,338
சிபிஐ - 2,11,407
பாஜக - 1,09,939
பிற - 1,400
என முன்னிலையில் இருக்கின்றன.
2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ராகுல்காந்தி முதல்முறையாக அந்த தொகுதியில் போட்டியிட்டார்.அப்போது ராகுல் காந்தி மொத்தம் 6,42,299 வாக்குகள் பெற்றிருந்தார். அவரை எதிர்த்து நின்ற கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆனி ராஜா, 2,80,594 வாக்குகள் பெற்றிருந்தார்.
போலவே பாஜக-வின் சுரேந்திரன் 1,29,868 வாக்குகள் பெற்றிருந்தார். இதில் ராகுல் காந்தி 3,61,705 வாக்குகள் வித்தியாசத்தில் முதலிடத்தை பெற்றிருந்தார். ஆனால் தற்போது 3,72,883 வாக்குகள் வித்தியாசத்தில் முதலிடத்தில் உள்ளார் பிரியங்கா.
அதாவது, பிரியங்கா தன் சகோதரர் ராகுலை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்டில், ஜேஎம்எம் கட்சி சார்பில் கண்டே தொகுதியில் போட்டியிட்ட ஹேமந்த சோரனின் மனைவி கல்பனா சோரன் 39727 வாக்குகளை பெற்று , 3060 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்து இருக்கிறார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட முனியா தேவி 42787 பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
அதேப்போல Barhait தொகுதியில் களம் கண்டிருக்கும் ஜேஎம்எம் சார்ப்பில் போட்டியிட்ட ஹேமந்த் சோரன் 17347 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
ஜேஎம்எம் ஹேமந்த் சோரன் 32484 வாக்குகளும், கம்லியேல் ஹெம்ப்ரோம் 15137 வாக்களும் பெற்றுள்ளன நிலையில், பாஜக பின்னடைவை சந்தித்து இருக்கிறது.
மகாராஷ்ட்ரா (288 தொகுதிகள்):
பாஜக கூட்டணி - 221
காங்கிரஸ் கூட்டணி - 57
பிற - 10
ஜார்க்கண்ட் (81 தொகுதிகள்):
பாஜக கூட்டணி - 30
ஜெ.எம்.எம் கூட்டணி - 50
பிற - 1
இடங்களில் முன்னிலையில் இருக்கின்றனர்.
வயநாடு:
காங்கிரஸ் - 5,50,004
சிபிஐ - 1,87,347
பாஜக - 1,02,396
பிற - 1,260
என முன்னிலையில் இருக்கின்றன.
288 தொகுதிகளைக்கொண்ட மகாராஷ்டிராவில் பாஜக 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. ஆனால், காங்கிரஸ் கூட்டணி 50+ தொகுஹிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இதன்படி, மகாராஷ்டிராவில் பெரும்பான்மையான இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கும் பட்சத்தில் அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
அதேப்போல, 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட்டில் பெரும்பான்மைக்கான எண்ணிக்கை 41 என்கிற பட்சத்தில், ஜெ.எம்.எம். - காங்கிரஸ் கூட்டணி 50 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
ஆனால், 30 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள பாஜக கூட்டணியில் பாஜகம் மட்டும் 27 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் என இரண்டு மாநில சட்டப்பேரவைத் தேர்தலோடு முன்னதாக நாடு முழுவதும் 14 மாநிலங்களை சேர்ந்த 48 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
அதன்படி உத்தரப் பிரதேசத்தில் 9, ராஜஸ்தானில் 7, மேற்குவங்கத்தில் 6, அசாமில் 5, பிஹார், பஞ்சாபில் தலா 4, கர்நாடகாவில் 3, கேரளா, மத்திய பிரதேசம், சிக்கிமில் தலா 2 தொகுதிகள், குஜராத், உத்தராகண்ட், மேகாலயா, சத்தீஸ்கரில் தலா ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
முதன்முறையாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ள பிரியங்கா காந்தி, வயநாடு இடைத்தேர்தலில் தொடர்ந்து அபரிவிதமான முன்னிலை வகித்து வருகிறார். சிபிஐ இரண்டாம் இடத்திலும், பாஜக மூன்றாம் இடத்திலும் உள்ளன. 11:45 நிலவரப்படி,
வயநாடு காங்கிரஸ் பிரியங்கா காந்தி - 3,29,541 வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் (சிபிஐ) - 1,13,354
பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் - 63,092
பிற 733
வாக்குகள் பெற்றுள்ளன.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், தொடக்கத்தில் இருந்தே பின்னடைவில் இருந்த இந்தியா கூட்டணி திடீரென தற்போது முன்னிலையை பெற்றுள்ளது.
ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த முதலமைச்சர் ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா, பாஜகவைச் சேர்ந்த எதிர்க்கட்சித்தலைவர் அமர் குமார் பௌரி உள்ளிட்ட 528 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது மாநில அரசியலில் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. இதேபோல், ஊழல் புகாரில் சிக்கி ஹேமந்த் சோரன் சிறைக்கு சென்று வந்தது இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கருதப்படுகிறது.
இந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி (காலை 11 மணி) ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் இருக்கிறது.
ஜெஎம்எம் கூட்டணி - 50
பாஜக கூட்டணி - 28
பிற கட்சிகள் - 3
இடங்களை கைப்பற்றியுள்ளன
ஆரம்பத்தில் நெக் டூ நெக் போட்டி நிலவி வந்த சுழலில், பின்னடைவை சந்தித்த ஜெஎம்எம் கூட்டணி, தற்போது முன்னிலை வகித்து வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில், பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்படுகிறது. இந்தநிலையில், பாஜக தலைமையிலான ஆளும் மஹாயுதி கூட்டணி தொடர்ந்து 213 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.
இத்தேர்தலில் மஹாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்களிலும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 81 இடங்களிலும், துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 59 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி 51,930 பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் (சிபிஐ) - 14,629
பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் - 7613
பிற கட்சிகள் - 121
வாக்குகளையும் பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக பார்க்கப்படும் இத்தொகுதியில் வயநாடு எம்.பி., பதவியை ராகுல் ராஜினமா செய்ததால், நவ.,13ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில்தான், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டார். பிரியங்கா காந்தி முதல்முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளார் என்பதால் இத்தேர்தல் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இந்தவகையில் இத்தேர்தலின் முடிவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிரா (288)
பாஜக கூட்டணி: 59,
காங்கிரஸ் கூட்டணி: 31,
பிற 2
ஜார்கண்ட் (81)
பாஜக கூட்டணி: 25
ஜெஎம்எம் கூட்டணி: 10
பிற :0
என்று நிலவரம் உள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
வயநாடு மக்களவைத்தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 13ஆம் தேதி நடந்தது. இத்தேர்தலில் 64.72 விழுக்காடு வாக்குகள் பதிவானது.
இந்தவகையில், தற்போது வயநாட்டிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக பார்க்கப்படும் இத்தொகுதியை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் அக்கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டார்.
அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யனும், பாஜக சார்பில் நவ்யா ஹரிதாசும் போட்டியிட்டனர்.
காலை 8.40 நிலவரப்படி:
காங்கிரஸ் - 7011 ,
சிபிஐ - 85,
பாஜக - 54,
பிற - 3
வாக்குகளை பெற்றுள்ளன.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கையானது தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில், இவ்விரு தேர்தல்கள் பற்றியும் அடிப்படையான சில தகவல்களை, இங்கே அறியலாம்.
288 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக முடிவடைந்தது.
இதேப்போல 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைப்பெற்று முடிந்தது.
மகாராஷ்டிராவில் 66.05% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தலில் 68% வாக்குகள் பதிவான நிலையில், 2ஆம் கட்டமாக நேற்று நடைபெற்ற தேர்தலில் 66% வாக்குகள் பதிவாகின.
இந்த நிலையில், இரண்டு மாநிலங்களுக்கும் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. காலை 8 மணி அளவில் தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில், முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. எண்ணிக்கை நடைபெறும் இடங்களில், துணை ராணுவப் படையினரும், காவல்துறையினரும் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா + காங்கிரஸின் I-N-D-I-A கூட்டணிக்கும், பாஜக கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.
ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) 41 இடங்களிலும்,
காங்கிரஸ் 30 இடங்களிலும்,
ராஷ்ட்ரிய ஜனதா தளம் 6 இடங்களிலும்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) 4 இடங்களிலும் போட்டியிட்டன.
பாஜக 68 இடங்களிலும்,
அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் (ஏஜேஎஸ்யு) 10 இடங்களிலும்,
ஜனதா தளம் (ஐக்கிய) 2 இடங்களிலும்,
லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 1 இடங்களிலும் போட்டியிட்டன.
காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகா விகாஸ் அகாடிக்கும், பாஜக அங்கம் வகிக்கும் மஹாயுதி கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது.
மஹாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்களிலும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 81 இடங்களிலும், துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 59 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன.
மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ் 101 இடங்களிலும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 95 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 86 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன.