இந்தியா

பேருந்து மீது லாரி மோதி விபத்து : 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு

பேருந்து மீது லாரி மோதி விபத்து : 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு

webteam

மத்திய பிரதேசத்தில் பேருந்து மீது லாரி மோதி விபத்திற்குள்ளானதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் படுகாயம் அடைந்தனர்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு தரப்பினர் வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். தொழிலாளிகள் பலர் சொந்த ஊர்களில் வேலையில்லாமல் வெளி மாநிலங்களில் வேலை பார்த்து வந்த நிலையில், இந்த ஊரடங்கினால் அவர்கள் சொந்த ஊருக்கே செல்லலாம் என நினைத்து ஆங்காங்கே நடந்தும், லாரிகளிலும் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மகாராஷ்டிராவிலிருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள சொந்த இடங்களுக்கு தொழிலாளிகள் லாரியில் சென்று கொண்டிருந்தனர். மத்தியப் பிரதேச மாநிலம் குணாவில் உள்ள கேன்ட் பி.எஸ் பகுதியில் நேற்று இரவு லாரி வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த பேருந்து மீது மோதி விபத்திற்குள்ளானது.

இதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த நபர்கள் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.