இந்தியா

4 மாதங்களில் 218 சிறுத்தைகள் பலி : இந்திய வனத்தின் சோகக் கதை

4 மாதங்களில் 218 சிறுத்தைகள் பலி : இந்திய வனத்தின் சோகக் கதை

webteam

இந்தியாவில் கடந்த 4 மாதங்களில் 218 சிறுத்தைகள் உயிரிழப்பதாக தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் வாழும் வனவிலங்குகளில் பெரும் ஆபத்திற்குள்ளான ஒரு விலங்காக சிறுத்தைகள் மாறியுள்ளன. இந்த சிறுத்தைகளுக்கு பேராபத்தாக இருப்பது வேறு எந்த விலங்கும் இல்லை. அது மனிதர்கள் தான். பெரும்பாலான சிறுத்தைகள் கிராமப்புறங்களில் நுழைவதால் அப்பகுதி வாசிகள் நடத்திய தாக்குதல்களினால் இறந்துள்ளன. 2014ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 41 சிறுத்தைகள் ரயில்வே விபத்துகள், சாலை விபத்துகளால் மட்டும் இறந்திருந்தன. இந்த எண்ணிக்கை 2015ல் 51, 2016ல் 51, 2017ல் 63 மற்றும் 2018ல் 80 ஆக உயர்ந்துள்ளது. 

ஆனால் இந்த எண்ணிக்கையை விட பெரும் எண்ணிக்கையாக இருப்பது மனித தாக்குதல்களால் உயிரிழந்த சிறுத்தைகளின் எண்ணிக்கை தான். கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 500 சிறுத்தைகள் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டில் சராசரியாக நாள் ஒன்றுக்கு ஒரு சிறுத்தை கொல்லப்பட்டிருக்கிறது. அதைவிட அதிகமாக இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 218 சிறுத்தைகள் இறந்துள்ளன. இது கடந்த ஆண்டைவிட 40 சதவிகிதம் அதிகம் ஆகும். 

இதில் பெரும்பாலானவை மனிதர்களின் தாக்குதலுக்கு பலியானவை தான். மற்றவை ரயில்வே விபத்துகள், சாலை விபத்துகள், நிர்நிலைகளில் விழுந்தும், கிணற்றில் விழுந்தும், நோய் வாய்ப்பட்டும் இறந்தவை. இந்த தொடர் உயிரிழப்புகள் இந்தியாவில் சிறுத்தை இனத்திற்கே பெரும் ஆபத்தாக அமைந்திருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.