பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் உடல் நிலை மோசமடைந்துள் ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ். கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அவர், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், உடல் நிலை காரணமாக, ராஞ்சியில் உள்ள ராஜேந்திர இன்ஸ்டியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரை மருத்துவமனையில் சந்தித்த அக்கட்சியின் எம்.எல்.ஏ ரேகா தேவி, ’லாலு பிரசாத் யாதவின் உடல் நிலை மோசமாகிவிட்டது. அவரால் தானாக எழுந்து நிற்கவோ, உட்காரவோ முடியவில்லை. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இதை டாக்டர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் உமேஷ் பிரசாத் கூறும்போது, ‘அவரது சர்க்கரை அளவு அதிகரித்துள்ளது. ரத்த அழுத்தமும் அதிகமாக உள்ளது. சர்க்கரை அளவை உடனடியாக குறைக்க, இன்சுலின் டோஸ் அளவை அதிகரித் து சிகிச்சை அளித்து வருகிறோம். இது குணமாக இன்னும் சில நாட்கள் ஆகும். அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்’ என்றார்.
லாலு பிரசாத் யாதவால் தானாக எழுந்து நிற்கவோ, உட்காரவோ முடியவில்லை. அருகில் உள்ள வாஷ் ரூமுக்கு கூட அவரால் நடக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.