வயநாடு இடைத்தேர்தல் புதிய தலைமுறை
இந்தியா

வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளும் இன்று வெளியாகிறது!

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியாங்கா காந்தி போட்டியிட்ட வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் முடிவு இன்று வெளியாகிறது.

PT WEB

ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற இருக்கிற சூழலில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியாங்கா காந்தி போட்டியிட்ட வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் முடிவும் இன்று வெளியாகிறது.

கேரளாவில் உள்ள வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 13ஆம் தேதி நடந்தது. இத்தேர்தலில் 64.72 விழுக்காடு வாக்குகள் பதிவானது.

காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக பார்க்கப்படும் இத்தொகுதியை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் அக்கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டார்.

அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யனும், பாஜக சார்பில் நவ்யா ஹரிதாசும் போட்டியிட்டனர். பிரியாங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டுள்ளதால், வயநாடு இடைத்தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதேபோன்று, மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் மக்களவைத் தொகுதி உள்பட13 மாநிலங்களில் உள்ள 48 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படுகின்றன.

தற்போதைய நிலவரம் என்ன?

காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையில், காலை 8:40 நிலவரப்படி காங். 7,011 வாக்குகளும், சிபிஐ 85 வாக்குகளும், பாஜக 4 வாக்குகளும், பிற 3 வாக்குகளும் பதிவாகியுள்ளன.