கேரளாவில் நாளை மறுதினம் ஓணம் பண்டிகையை கொண்டாட மக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.
கேரளாவில் அனைத்துத்தரப்பு மக்களும் கொண்டாடக்கூடிய ஓணம் பண்டிகை 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதன்படி நாளை ஓணம் கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வரும் கேரள அரசு, ஓணத்தையொட்டி பல தளர்வுகளை அறிவித்துள்ளது. ஆயினும், வீடுகளில் இருந்தபடியே ஓணம் பண்டிகையை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஓணத்தின் முதல் நாளான உத்திராட நாள், நாளை கொண்டாடப்படுவதால் தேவையான பொருட்களை மக்கள் வாங்கி வருகிறார்கள். ஜவுளி, பூக்கள், காய்கறிகள் வாங்க கடைகளில் மக்கள் கூடி வருகிறார்கள். கேரளாவில் மிகப்பெரிய சந்தையான திருவனந்தபுரம் சாலா மார்க்கெட்டிலும் மக்கள் அதிக அளவு காணப்பட்டனர்.