இந்தியா

மதமாற்ற திருமணத்தால் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட முஸ்லீம் குடும்பம்

மதமாற்ற திருமணத்தால் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட முஸ்லீம் குடும்பம்

webteam

கேரளாவில் கிறிஸ்தவரை மணந்து கொள்ள பெண்ணை அனுமதித்த இஸ்லாமிய குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் யூசுப். இவரது மகள் ஜஷீலா தன்னுடன் பணிபுரியும் கிறிஸ்தவரான டிசோ டாமி என்பவரை காதலித்துள்ளார். இதற்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை ஜஷீலாவும், டிசோ டாமியும் பதிவுத் திருமணம் செய்துள்ளனர். இதையடுத்து அவர்களது திருமணத்தை ஏற்றுக் கொண்ட ஜஷீலா குடும்பத்தினர் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, ஊர்மக்களை அழைத்துள்ளனர். ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜமாத் கமிட்டியினர், அந்தக் குடும்பத்தினரை மற்ற இஸ்லாமியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அத்துடன் அந்த குடும்பத்தை ஊரைவிட்டும் ஒதுக்கிவைத்துள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.